தேசிய முகமை தேர்வு சார்பில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீ சைதன்யா முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை பிடித்தது.
முதலிடத்தில் கிவிஸ் என்ற மாணவனும் , ஐந்தாவது இடத்தில் திவ்யா, ஆறாவது இடத்தில் முகமது சமீர் , எட்டாவது இடத்தில் பெனோத் தீரஜ் குமார், பத்தாவது இடத்தில் மஞ்சரி வருண் ஆகியோரும் இடம் பிடித்தனர்.
சைதன்யா முதல் 100 இடங்களில் 19 இடங்களையும், முதல் 1000 இடங்களில் 98 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளது. இதில் நாமக்கல் ஸ்ரீ சைதன்யா பள்ளியை சேர்ந்த அபினீத் நாகராஜ் என்ற மாணவன் இந்திய அளவில் பொது பிரிவில் 50வது இடத்தையும் தமிழ்நாடு மாநில அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய அளவில் பொதுப்பிரிவில் 3வது இடத்தையும் தமிழ்நாடு மாநில அளவில் நான்காவது இடத்தையும் ஹர்திக் விஜய ராஜா, 601 வது இடத்தை நவீன் ஜெயவேல் இந்திய அளவில் பொது பிரிவில் 643 வது இடத்தை அவந்திகா சுபாஷ், 671 வது இடத்தை தனுஸ்ரீ பிடித்து வெற்றி பெற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 500 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று 400 மருத்துவ இடங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நீட் தேர்வில் இந்த அரிய சாதனையால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீட் 2025 இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஸ்ரீசைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் சுஷ்மா பொப்பனா, ஜெ.ஹரிபாபு, ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக் தலைவர் (தமிழ்நாடு) வெங்கட கிருஷ்ண ரெட்டி,பிராந்திய பொறுப்பாளர் பெருமாள் கணேசன், துணை பொது மேலாளர் டாக்டர் சத்தியவரதன், நாமக்கல் பள்ளி முதல்வர் ஈஸ்வரன் மற்றும் சுபாஷினி ஆகியோர் நீட் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசுகளை வழங்கியும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



