fbpx
Homeபிற செய்திகள்பரங்கிப்பேட்டை அருகே கலைஞர் கனவு இல்ல திட்டப்பணியை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட ஆட்சியர்

பரங்கிப்பேட்டை அருகே கலைஞர் கனவு இல்ல திட்டப்பணியை ஆய்வு செய்த கடலூர் மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதி களில் ஊரக வளர்ச்சித் துறை சார் பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி களை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, சி.புதுப் பேட்டை தில்லைவிடங்கன், சி.முட்லூர், நக்கர வந்தன்குடி ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கூறியதாவது: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத் தில் 2024-25ஆம் ஆண்டுக்கு 189 வீடுகளும், 2025-26ஆம் ஆண் டுக்கு 256 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பல்வேறு நிலைகளில் நடைபெறும் கட்டுமான பணிகளை தாமாக மேற்கொள் வது மற்றும் விரைவுப்படுத்துவது குறித்து சி.புதுப்பேட்டை தில்லைவிடங்கன், சி.முட்லூர் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, நக்கரவ ந்தன்குடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த பழங் குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 வீடுகளும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 22 வீடுகளும்,பிரதம மந்திரி ஜன்மன் திட்டத் தின் கீழ் 5 வீடுகளும் என 52 வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்த ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகு திகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணி களையும் விரைந்து முடித்து பயன் பாட்டுக்கு கொண்டுவர அலுவவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட மாதா கோவில் தெரு கொடிமரத் தெரு பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை யின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாணை வழிகா ட்டுதலின் படி, தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img