fbpx
Homeபிற செய்திகள்ரோபோ மூலம் நகரும் ரதம்: வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தல்

ரோபோ மூலம் நகரும் ரதம்: வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தல்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சுகேசன் மற்றும் குப்புசாமி மனித இயந்திரம் (ரோபோ) மூலம் ரதத்தை இழுத்துச் செல்வது போன்ற ஒரு வண்டியை தயாரித்துள்ளனர். இதில் இருவர் பயணம் செய்யலாம்.

சென்சார் மற்றும் பேட்டரி மூலம், பயணம் செய்பவர்கள் இந்த ரதத்தை இயக்கலாம். இதற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதை மேலும் அபிவிருத்தி செய்து மனித இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் சக்கரங்கள் அதன் கால்களில் பொருத்தப்பட்டு வேகமாக இந்த ரதம் செல்லும் விதத்தில் மாற்றி அமைக்க உள்ளோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் இந்த ரதம் மணமக்கள் செல்லும் அலங்கார ஊர்தியாக திகழும் என்பதால் எதிர்காலத்தில் இந்த வண்டிக்கு வரவேற்பு இருக்கும் என்று அவர்கள் கூறினர்.

அவர்களின் இந்த முயற்சியை கல்லூரி தாளாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப் பணன் மற்றும் முதல்வர் தங்கவேல் பெரிதும் பாராட் டினர்.

படிக்க வேண்டும்

spot_img