fbpx
Homeபிற செய்திகள்10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த அருணாச்சலா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த அருணாச்சலா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.

அதேபோன்று, மாணவர்கள் ஸ்ரீ விக்னேஸ்வரன் 500-க்கு 497 மதிப்பெண்களும், பிர ணவ் 493, சூரியகுமரன் 491 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடங்களை பிடித்துள்ளனர். பாடவாரியாக அறிவியலில் 28 பேரும், சமூக அறிவியலில் 9 பேரும், ஆங்கிலம் மற்றும் கணிதத் தில் தலா ஒருவர் என மொத்தம் 39 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதுதவிர 480-க்கு மேல் 13 பேர், 450 முதல் 479 வரை 33 பேர், 400 முதல் 450 வரை 48 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பொதுத்தேர்வில் சிறப்பிடங்கள் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் ரத்தினசுப்பிரமணியன், அறக்கட்டளை செயலர் ராமலிங்கம், பொருளாளர் சரவணன், பள்ளி மேலாண்மை குழு இயக்குனர் முத்துக்குமரன், பாடத்திட்டங்கள் பள்ளி முதன்மை கல்வி ஆலோசகர் செல்வராஜ், தலைமை ஆசிரியர் கவிதா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img