fbpx
Homeபிற செய்திகள்எப்.சி மெட்ராஸ் அகாடமியின் எமெர்ஜிங் ஸ்டார்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் துவக்கம்

எப்.சி மெட்ராஸ் அகாடமியின் எமெர்ஜிங் ஸ்டார்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் துவக்கம்

கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள ஜி.ஜி.எஸ்.ஏ ஸ்போர்ட் அரினா மைதானத்தில் எப்.சி மெட்ராஸ் அகாடமி நடத்தும், எமெர்ஜிங் ஸ்டார்ஸ் லீக் தொடர் கால் பந்து போட்டிகளில் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிபடுத்தினார்கள்.

கோவையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் ப்ளூ கப்ஸ் திட்டத்தின் கீழ், எப்.சி மெட்ராஸ் அகாடமி நடத்தும், எமெர்ஜிங் ஸ்டார்ஸ் லீக் கால் பந்து தொடர் கோவையில் நேற்று தொடங்கியது. இந்த தொடர், வரும் மே மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொண்டாமுத்தூர் சாலையில் ஓணாப்பாளையத்தில், உள்ள ஜி.ஜி.எஸ்.ஏ ஸ்போர்ட் அரினா மைதானத்தில் நடைபெறும் போட்டியில், மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து எப்.சி மெட்ராஸ் அகாடமியின் இயக்குனர் விக்ரம் நனிவாடேகர், டெக்னிகல் டைரக்டர் வெங்கடேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவையில் எப்.சி மெட்ராஸ் லீக் தொடங்க உள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாகவும், இந்த போட்டிகளில் கலந்து கொள்ள, கோவை மட்டுமின்றி, சேலம், கொச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்து 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட 16 அணிகள் கலந்து கொள்வதாகவும் இதில், மொத்தம் 160 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள் எனவும் தெரிவித்தனர்.

எப்சி மெட்ராஸ் தேசிய அளவில் நல்ல அகாடமியாக உள்ளதாகவும், இந்த தொடர் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.முன்னதாக டோர்னமென்ட்டை வெளிப்படுத்தும் விதமாக எப்.சி லோகோ பொறித்த டி சர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் நிர்வாகம் சார்பில் பலூன்களை பறக்கவிட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு எதிர்பாரத விதமாக காயங்கள் ஏற்படும் பட்சத்தில் ஆர்தோ ஒன் மருத்துவமனை சார்பாக ஆம்புலன்ஸ் வசதிகளும் முதலுதவி அளிக்கும் வகையில் முதலுதவி பெட்டகம் , மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் இருந்தனர்.
இந்த துவக்க விழாவில் முக்கிய பிரமுகர்கள் அகடாமி பயிற்சியாளர்கள் வீரர்கள் பெற்றோர்கள் உட்பட ஏராளம £னோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img