fbpx
Homeபிற செய்திகள்நிறைந்தது மனம் நிகழ்ச்சி - செய்தியாளர்களுடன் சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்...

நிறைந்தது மனம் நிகழ்ச்சி – செய்தியாளர்களுடன் சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், நேற்று (1ம் தேதி) நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செய்தியாளர்களுடன் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பச்சிளங் குழந்தைகள் பிரிவு, தாய் சேய் நல பிரிவு, உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு, பொது நோயாளிகள் பிரிவு, சிறுநீரக குருதி பகுப்பாய்வு மையம் உள் ளிட்ட மருத்துவ பிரிவுகளுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சைகள் முறை யாக வழங்கப்படுகிறதா எனவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக அணுகுகிறார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மருத்துவகல்லூரி மருத்துவமனையின் சமையல் கூடத்திற்கு சென்று நோயாளி களுக்காக தயாரிக்கப்படும் உணவை ருசித்து அதன் தரத்தினை பரிசோதனை செய்தார். உணவு கூடத்தில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு தயாரிப்பு பொருட்களின் இருப்பு குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 3170 புறநோயாளிகளும், 955 உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மாதத்திற்கு சராசரியாக 1040 மகப்பேறு மருத்துவம் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சராசரியாக 635 சுகபிரசவம் மேற்கொள்ளப் படுகின்றது.

கடந்த 2024 ஆம் ஆண்டு மொத்தம் 3 இலட்சத்து 49 ஆயிரத்து 563 உள்நோயாளிகளுக்கும், 11 இலட்சத்து 60 ஆயிரத்து 211 புற நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஜனவரி முதல் பிப்ர வரி வரை 53 ஆயிரத்து 116 உள்நோயாளிகளுக்கும், 1 லட்சத்து 78 ஆயிரத்து 546 புற நோயாளிகளுக்கும் தற்போது வரை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.


மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் (டயாலிசிஸ் பிரிவில்) 25 சிறுநீரகத் தூய்மை கருவிகள் கொண்டு மாதந்தோறும் சராசரியாக 1400 பேர் டயாலி ஸிஸ் சிகிச்சையால் பயனடைகின்றனர்.

சிறுநீரகவியல் பிரிவில் நீண்ட வருடங்களாக சிகிச்சை பெற்று வரும் வள்ளியம்மான் க/பெ ரேணு என்கிற நோயாளி தெரிவித்ததாவது: நான் திருவண் ணாமலை பெரிய கல்லாபாடி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 8 வருடத்திற்கு மேலாக சிறுநீரக தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. டயாலிசிஸ் சிகிச்சைக்காக தொடர்ந்து இம்மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற செல்கிறேன்.

இம்மருத்துவமனையில் பணி யாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எனக்கு நல்ல முறையில் சிகிச்சைகள் அளிக்கின்றார்கள். முதலமைச் சரின் மருத்துவ காப்பீடு அட்டை எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் எனக்கு தேவையான மருந்துகளை முதல்வர் மருந்தகத்தில் பெற்று பயனடைந்து வருகிறேன், நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் சிறுநீரகவியல் பிரிவில் கடந்த 4 வருடங்களாக சிகிச்சை பெற்று வரும் புஷ்பா ராணி க/பெ அருள்தாஸ் என்கிற நோயாளி தெரிவித்ததாவது:
நான் திருவண்ணாமலை அய்யங்குணம் பகுதியில் வசித்து வருகிறேன்.

நான் கடந்த 4 வருடங்களாக சிறுநீரக தொற்று பாதிப்புக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடர் இரத்த மாற்று சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நல்ல முறையில் மருத்து சிகிச்சைகள் அளிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்டு, முறையாக ஆட்டோ கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து பயணிகளிடம் கேட்டறிந்து, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1800 425 5430 என்ற கட்டணமில்லா எண்ணை பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவ்வாறு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் வரும்பட்சத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஹரிஹரன், மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் மரு.மாலதி, திருவண்ணா மலை மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரகாஷ், மருத்துவர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img