ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் இருபதாவது மற்றும் நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கேபிஎம்ஜி நிறுவனத்தின் மூத்த இணை இயக்குனர் சகீல்நாயர், கல்லூரி தலைவர் வி.சண்முகன் ஆகியோர் 787 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினர். கல்லூரி செயலர்கள் நந்தகுமார், பிரதீப், திருமூர்த்தி, முதல்வர்கள் ரகுபதி, நந்தகோபால், முதன்மை கல்விஅதிகாரி எஸ்.ஆறுமுகம், தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் ஏ.கே.வேலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



