யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் முதுமலை யானை முகாமில் சர்வதேச வன தினம் முதுமலை வன பாதுகாப்பு படையின் உதவி வன பாதுகாவலர் திரு கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.
யூத் ஹாஸ்டல்ஸ் மாநில தலைவர் திரு வெங்கட் நாராயணன், மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா, முதுமலை யானை முகாம் வனச்சரகர் மேகலா, தெப்பக்காடு வனச்சரகர் குலோதுங்கச் சோழன், தெலுங்கானா மாநில எம்.சி.ஆர். பொது இயக்குனர் சேசாங்க் கோயல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் யூத் ஹாஸ்டல்ஸ் சார்பில் முதுமலை வனப்பாதுகாப்பு படையின் உதவி வனப் பாதுகாவலர் கிருபாகரன் மற்றும் பொது இயக்குனர் சேசாங்க் கோயல் ஆகியோர் யானை பாகர்களுக்கு சர்வதேச வன தினத்தை முன்னிட்டு துணிமணிகள் வழங்கினார்கள்.



