fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் கல்வி நிறுவன விழாவில் வேந்தர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் அறிவுரை ‘மாணவிகள் மனஉறுதியுடன் செயல்பட வேண்டும்’

அவினாசிலிங்கம் கல்வி நிறுவன விழாவில் வேந்தர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் அறிவுரை ‘மாணவிகள் மனஉறுதியுடன் செயல்பட வேண்டும்’

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நன்றி நவிலும் விழா நடந்தது. இவ்விழாவில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் மாணவியர் நலன்புல முதன்மையர் பேராசிரியர் முனைவர் வாசுகிராஜா வரவேற்புரை ஆற்றினார்.

அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் தி.ச.க மீனாட்சிசுந்தரம் தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், பெண்கல்வி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இக்கல்வி நிறுவனத்தை உருவாக்கிய பதம்பூஷன் அவினாசிலிங்கம் ஐயா அவர்கள் குறித்தும், பெண்கல்விக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பத்மஸ்ரீ முனைவர் ராஜம்மாள் தேவதாஸின் கல்விப்பணி குறித்தும் ஆற்றிய பல்வேறு சேவைகளைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

கல்வியோடு கலாச்சாரத்தைக் கற்றுத் தருகின்ற இக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வரும் முறை குறித்தும், பெண்கள் கல்வி கற்று சாதனை புரிந்த கருத்துக்களையும் அவர் எடுத்துக் கூறினார்.

விவேகானந்தர் மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் வழிகளைப் பின்பற்றி நாளைய சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என் றும் உயர்கல்வித்துறை சமமான கல்வியினை அனைவருக்கும் வழங்கி வருகின்றது என்றும் எடுத்துரைத்தார்.

மாணவியர் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செயல்பட வேண்டும். இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண் பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் வகையில் இக்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது என்றும், பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது என்றும் கூறினார்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் பாரதி ஹரிசங்கர் 2024&-2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கை யினை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கொடைக்கானல், அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தம் உரையில் அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் பெண்களுக்குக் கல்வி வழங்கும் முதன்மை நிறுவனமாக சிறப்பாகத் திகழ்கின்றது என்றும், காந்திய வழியை அறமாகப் பின்பற்றிய அவினாசிலிங்கம் அய்யா மற்றும் முனைவர் இராஜம்மாள் தேவதாஸ் அம்மா அவர்களின் கல்விப் பணி குறித்தும், அவர்களின் ஆளுமைத் தன்மை குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்நிறுவனம் கல்வியோடு தேச பக்தியையும், ஆன் மீகத்தையும் கற்றுக் கொடுக்கிறது. பெண்கள் கல்வி கற்க பல்வேறு சவால்களைச் சந்திக்க நேர்கிறது. கல்வியைப் பொறுத்தமட்டில் பெண்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

கால மேலாண்மை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொலை நோக்குப் பார்வை போன் றவற்றைப் பெண்கள் உறுதியாகப் பெற்றிருக்க வேண்டும். மேலும் பெண்கள் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை புரிந்துள்ளனர் என்று கூறி சாதனைப் பெண்மணிகளின் பங்களிப்பினையும், சாதனைகளையும் பட்டியலிட்டுக் காட்டினார்.

குறிப்பாக சுனிதா வில் லியம்ஸ் அவர்களின் மனஉறுதியை இன்றைய பெண்கள் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி, உடற்பயிற்சிக் கல்வித் துறையிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 274 மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம்.கே.நிஷா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img