fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரியில் இதழியல் களச் சொற்பொழிவு

நிர்மலா மகளிர் கல்லூரியில் இதழியல் களச் சொற்பொழிவு

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில் இதழியல் கள அமைப்பின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர், முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர். அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் தலைமை தாங்க, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக நிர்மலா மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் பிரியா பிரேமலதா வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்றான மன் கி பாத் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்து இதழியலின் முக்கியத்துவம் பற்றியும் விவரித்தார்.

இச்சிறப்பு சொற்பொழிவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img