Homeபிற செய்திகள்நாமக்கலில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு - எம்பி திறந்து வைத்தார்

நாமக்கலில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு – எம்பி திறந்து வைத்தார்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலை முன்பாகவும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024-25 கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதன் பயன்பாட்டை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி, நகர கழக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் ரா.மகேஸ்வரி, மாநகராட்சி செயற்பொறியாளர் சண்முகம், துப்பரவு அலுவலர் திருமூர்த்தி, ஒப்பந்ததாரர் அசோக் மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img