ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறை சார்பாக கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
இவ்விழாவில் செயலர் மற்றும் தாளாளர் கே.கே. பாலுசாமி தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. சங்கரசுப்பிரமணியன் மற்றும் இயக்குநர் முனைவர் இரா. வெங்கடாசலம் வாழ்த்துரை வழங்கினார்கள். மாடல் மற்றும் ஃபே&ன் நடன இயக்குநர் பிரவீன், ஃபேன் மாடலின் தீபக், ஆடை வடிவமைப்பாளர் நவீனா ஆகியோர் சிறப்பு விருந்தினாக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றினார்கள்.
மாணவ மாணவிகளுக்குத் தனி நடனம், குழு நடனம், புகைப்படம் எடுத்தல், ஃபே&ன் என்.எச் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் மெஹந்தி எனத் தனித் தனியாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 300 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதிக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குத் தனிப் பரிசு வழங்கப்பட்டது. ஆடை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு துறைத் தலைவர் மா.கார்த்திகா வரவேற்பு வழங்கினார்.
உதவிப் பேராசிரியர் பா. ரமிலா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். இறுதியாக உதவிப் பேராசிரியர் க.ல. நந்திதா நன்றிரை வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை சங்கரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தட்டிச் சென்றார்கள்.



