fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் விற்பனை அங்காடி செயல்பாடு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், செய்தியாளர்கள் பயணத்தில்...

கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் விற்பனை அங்காடி செயல்பாடு: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், செய்தியாளர்கள் பயணத்தில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாநகராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் விற்பனை அங்காடி மற்றும் காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள முதல்வர் மருந்தகத்தினை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.

மகளிர் திட்டம் சார்பாக திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு பல்பொருள் விற்பனை அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தேன், சாமை, பினாயில், சோப், கைவினைப் பொருட்கள், கைப்பைகள், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மதி விற்பனை பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்பொருள் விற்பனை அங்காடியில் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் சிறு தானிய உணவினை பார்வையிட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் விற்பனை நிலை குறித்து கேட்டறிந்து, மேலும் விற்பனையை அதிகரிக்க தேவைப்படும் உதவிகளை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, பைபாஸ் சாலையில் உள்ள முதல்வர் மருந்தகத்தினை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு, மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு விவரம், விற்பனை நிலை குறித்தும், பொதுமக்களுக்கு தேவைப்ப டும் மருந்துகளை அறிந்து விற்பனை செய்யுமாறும் அறி வுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யாதேவி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கம்) பார்த்திபன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img