fbpx
Homeபிற செய்திகள்பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி

பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூரில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், அருணா சந்திரசேகர், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img