fbpx
Homeபிற செய்திகள்எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம் கல்லூரியில் வணிக நடைமுறையில் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கம்

எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம் கல்லூரியில் வணிக நடைமுறையில் நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கம்

உலக நிலையான எரிசக்தி தினத்தைக் கொண்டாடும் வகையில், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM) நிகழ்நேர வணிக நடைமுறையில் நிலைத்தன்மை குறித்த விரிவுரையை நடத்தியது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் இயக்குநர் அல்லி ராணி தலைமை தாங்கி, “எதிர்கால தொழிலதிபர்களாக இளைஞர்கள் நிலைத்தன்மை போர் வீரர்களாக மாற வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஆதரிக்க வேண்டும், மற்றும் பொறுப்பான கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்“ என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வுக்கு திருப்பூரில் உள்ள புனர் பவா சஸ்டைனபிள் ப்ரொடக்ட்ஸின் நிர்வாக இயக்குநர் சக்திவேல் கூறுகையில், “நிலைத் தன்மை என்பது நாம் எடுக்கும் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும் ஒரு பொறுப்பு. வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தையும், ஒரு நிறுவனத்தின் வெற்றி வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுவதில்தான் உள்ளது” என்றார்.

இந்த அமர்வு கல்வி மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புகளில் நிலைத்தன்மையை ஒருங்கிணைத்து, ஜவுளி மற்றும் மேலாண்மைத் துறைகளில் மாணவர்கள் பொறுப்பான நிபுணர்களாக மாற அமைந்தது.

படிக்க வேண்டும்

spot_img