ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் பயோடெக்னாலஜி துறை சார்பில், “உயிரியல் சிகிச்சையில் வளர்ச்சி” தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் முனைவர் சசிஆனந்த் துவக்கி வைத்தார்.
துணை வேந்தர் முனைவர் நாராயணன், பதிவாளர் முனைவர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.டீன் சுந்தர் வரவேற்றார்.
மதுரை அரவிந்த் உயிரியல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் தர்மலிங்கம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு “பயோகோம்“ உயிரிய இயக்கம், “அறிவியல் தின புதிய கண்டுபிடிப்பு குறிக்கோள்” பற்றி உரையாற்றினார். கருத்தரங்கு மலரை வெளியிட்டார்.
சென்னை ஐஐடி பேராசியர் கௌரி பிரியா, சென்னை லெமினால் பயோ நிறுவன துணைத்தலைவர் செந்தில்குமார், பெங்களூர் பயோசின் நிறுவன இயக்குநர் நல்லையா கருத்தரங்கில் பேசினர்.
25 கல்லூரிகளிலிருந்து 100 மாணவர்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் சுவரொட்டி, வினாடி வினா போட்டிகள், பொருட்காட்சி நடைபெற்றன. பயோ, கெமிக்கல், புராஸஸிங் துறைகள் பள்ளி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் இணைந்து கருத்தரங்கை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். துறைத்தலைவர் வானவில் நன்றி கூறினார்.



