fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்

முதல்வர் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி ஈரோடு திமுக சூரம்பட்டி பகுதி சார்பில் வில்லரசம்பட்டியில் நடைபெற்றது. வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியை சுரம்பட்டி பகுதி செயலாளர் முருகேஷ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த மூன்று நாள் போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.

அதில் முதல் பரிசை திண்டல் கியூப் அணி, இரண்டாவது பரிசு பள்ளிபாளையம் ஸ்டார் பிஷ் அணி, மூன்றாவது பரிசு ஈரோடு டர்ப் அணி பெற்றன. அவைகளுக்கு முறையே ரூபாய் பனிரெண்டாயிரம் பத்தாயிரம் 7000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மு.சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், திண்டல் குமாரசாமி, வீசி நடராசன், ராமச்சந்திரன், முன்னாள் மேயர் குமார் முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img