fbpx
Homeபிற செய்திகள்ரிவெரா 2025: வேலூர் விஐடி, சென்னை எஸ்ஆர்எம் ஒட்டுமொத்த சாம்பியன்: நடிகர் சோனு சூட் பரிசு...

ரிவெரா 2025: வேலூர் விஐடி, சென்னை எஸ்ஆர்எம் ஒட்டுமொத்த சாம்பியன்: நடிகர் சோனு சூட் பரிசு வழங்கினார்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடை பெற்ற ரிவேரா-2025 சர்வேச கலை, விளையாட்டு விழாவில் விளையாட்டு பிரிவில் வேலூர் விஐடி பல்கலைக்கழக அணிக்கும், கலாசார பிரிவில் சென்னை எஸ்ஆர்எம் பல் கலைக்கழக அணிக்கும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டன.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-2025 சர்வேச கலை, விளையாட்டு விழா வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
விழாவை இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால் துரை தொடங்கி வைத்தார்.

விழாவில் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள 26 நாடுகளிலிருந்து 86 பல்கலைக்கழகங்கள், கல் லூரிகளைச் சேர்ந்த 45,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விளையாட்டுப் போட்டிகள், நாடகம், நாட்டியம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பாட் டுக்கு பாட்டு என 150-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

குறிப்பாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசார பண்பாட்டை விளக்கும் வகையில், மாணவ, மாணவிகளின் ஐக்கியா கலை நிகழ்ச்சியும், இன்ஃப்யூசன் எனும் வெளி நாட்டு மாணவர்களின் தனித்துவமான கலாசார நிகழ்ச்சிகளும், கலா என்ற பெயரில் பார்வையற்ற மாணவர்களுக்கான திறன் போட்டிகளும், தமிழி என்ற பெயரில் ராஜ்மோகன், எம்டி இசைக் குழுவின் தமிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. தவிர, தின மும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. விழாவில் நடிகர் சோனு சூட் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்கினார்.

இதில், விளையாட்டுப் பிரிவில் வேலூர் விஐடி பல்கலைக்கழக அணிக் கும், கலாசார பிரிவில் சென்னை எஸ்ஆர்எம் பல் கலைக்கழக அணிக்கும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டன.

விழாவில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், ரிவேரா ஒருங்கிணைப்பாளர் கோகுல்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img