fbpx
Homeபிற செய்திகள்உலகின் 3வது பெரிய ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவன நாடாக மாறும் இந்தியா

உலகின் 3வது பெரிய ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவன நாடாக மாறும் இந்தியா

புதுமை மற்றும் தொழில்முனைவோர் அமைப்பின் 20வது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு இந்திய அரசின் அறிவியல் மற் றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு மற்றும் கண்டுபிடிப்பு பிரிவின் தலைவர் பிரவீன் ராய் பேசுகையில், “அரசாங்கம் ஸ்டார்ட்-அப் நிறுவனங் களை துவக்குவதற்கும் அதன் கொள்கைகளுக்கும் புதுமை மற்றும் தொ ழில்முனைவோர் அமை ப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் உறுதுணை யாக செயல்பட்டு வருகின் றன” என்றார்.

தொடர்ந்து பேராசி ரியர் அபய் கரண்டிகர் கூறுகையில், “மத்திய அரசு தொழில் முனை வோருக்கான சிறந்த சுற் றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது” என் றார். பின்னர் ஓபன் சயின்ஸ் ஸ்டேக், ஸ்டார்ட்-அப் ஆலோசகர் அஜய் சேத்தி கூறுகையில், “தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தன்னி றைவு பெறும் வகை யில் அவர்களுக்கான முதல் ஆர்டர்கள் கிடைக்க வில்லை. ஆனால் இன்று அதை அவர்கள் எளிதாக பெற்றுவிட முடியும்“ என்றார்.

சைன் அமைப்பின் கவர்னர்கள் குழுவில் பணியாற்றும் மூத்த உறுப்பினரான அஷாங்க் தேசாய் கூறுகையில், “தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தி யாவை உலகளாவிய அளவில் கொண்டு செல் லும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்“ என் றார்.

படிக்க வேண்டும்

spot_img