Homeபிற செய்திகள்கோவையில் கௌசிகா நதி புரைமைப்பு- முதல் கட்ட அளவீட்டு பணி தொடங்கியது

கோவையில் கௌசிகா நதி புரைமைப்பு- முதல் கட்ட அளவீட்டு பணி தொடங்கியது

கோவையில் கௌசிகா நதி புனரமைப்பு பணி நேற்று (17ம் தேதி) தொடங்கியது.
கோவை ரோட்டரி சங்கம் 3201 மற்றும் கௌசிகா நீர் கரங்கள் இணைந்து கௌசிகா நதி புனரமைப்பு அளவீட்டு பணி தொடக்க விழா நேற்று (17 – ந் தேதி) வையம்பாளையத்தில் உள்ள நதிக்கரையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரோட் டரி சங்கம் கவர்னர் வக்கீல் சுந்தரவடிவேலு கலந்து கொண்டு கௌ சிகா நதி புனரமைப்பு பணிக்கான முதல் கட்ட அளவீட்டு பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் கௌசிகா நதி புனரமைப்பு அமைப்பு தலைவர் செல்வராஜ் தொல்லியல் துறை ஆய் வாளர் மணிமேகலை கோவில்பாளையம் பேரூராட்சி தலைவி கோமளவள்ளி, கொண்டையம்பாளையம் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img