Homeபிற செய்திகள்உலக ஓசோன் தினம்: பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழ மரக் கன்றுகள் நடவு

உலக ஓசோன் தினம்: பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழ மரக் கன்றுகள் நடவு

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 10 நாள்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பழ மரக் கன்றுகளை நடவு செய்யும் பணியைத் பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீதா, பள்ளி வேளாண் ஆசிரியர் கந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரக் கன்றுகள் அளித்தல், மஞ்சப்பை வழங்குதல், ஓசோன் தினம் பற்றிய உரையாடல், தூய்மை உறுதிமொழி எடுத்தல், பனைமர விதைகள் சேகரித்தல், நதிக்கரை ஓரங்களில் பனை விதைகள் விதைத்தல் போன்று பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img