fbpx
Homeபிற செய்திகள்கரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு திட்டத்தில் 760 வீடுகள் கட்டும் பணி செய்தியாளர்கள் பயணத்தில் கலெக்டர்...

கரூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு திட்டத்தில் 760 வீடுகள் கட்டும் பணி செய்தியாளர்கள் பயணத்தில் கலெக்டர் ஆய்வு

கரூர் மாவட்டம் முழுவதும் 760 கலைஞரின் கனவு இல்லங்கள் கட்டும் பணி ரூ.26.60 கோடி மதிப்பிலும் 2936 தொகுப்பு வீடுகள் ரூ.19.64 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் வேலம்பாடி மற்றும் புங்கம்பாடி பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணிகளையும், முத்து கவுண்டன் பாளையத்தில் தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பொதுமக்கள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணியை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் அரவக்கு றிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 22 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 113 வீடுகளும், கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 35 வீடுகளும், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் 51 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 101 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 77 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 170 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 191வீடுகளும் என மொத்தம் 760 வீடுகள் ரூ.26.60 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிகள் நடைபெற்ற வருகிறது. இந்த பணிகளை முடித்து பயனாளிகளை அவர்களின் சொந்த இல்லத்தில் வசிப்பதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஏழ்மையிலும் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசின் சார்பாக கட்டி கொடுக்கப் பட்ட பல்வேறு வகையான தொகுப்பு வீடுகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 2936 வீடுகள் மொத்தம் ரூ.19.64 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்ற வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மீ. தங்கவேல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அரவக்குறிச்சியில் அரசு நடநிலைப் பள்ளியில் பொது நிதி ரூ.69.17 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் கட்டிடங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், அதே பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கான கழிவறை கட்டும் பணியையும், ரூ.8.50 மதிப்பில் மாணவிகளுக்கான கழிவறை கட்டும் பணியையும் பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் லிங்கம் நாயக்கன் பட்டியில் அரண்மனைத் தோட்டத்தில் ரூ.12.70 லட்சம் இடத்தில் புதிய நியாயவிலை கட்டும் பணியையும், ரூ.9.03 லட்சம் மதிப்பில் விவசாயிகள் பயன்படுத்தும் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img