பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மசாலாக்களை கொண்டு உணவுகள் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியின் கீழ் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட் சியில் காவேரி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவிற்காக பாரம்பரிய முறையில் மசாலாப் பொருட்கள் தயாரிப்பு செய்வதை செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுக்கு தெரிவித் ததாவது:- முதலமைச்சர் அவர்களின் சீரிய திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது தமிழ்நாட்டிலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்தி போளுர் பகுதியில் கிடைக்கும் தரமான மஞ்சள், ஜவ்வாதுமலை பகு தியில் கிடைக்கும் மிளகு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பாரம்பரியமிக்க இயற்கை முறையிலான மசாலாப் பொருட்கள் தயார்செய்யப்பட்டு உணவு உண்ணும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக, தரமானதா கவும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலைப் பட்டியலின் படியும் வழங்கும் பொருட்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல் படுத்தப்படும் பள்ளிகளில் உள்ள மையங்களுக்கு காலை உணவு சமைக்கும் மையங்களுக்கு மசாலா பொருட்கள் வழங் கப்பட்டுள்ளது. அதன் படி திருவண்ணாமலை மாவட்டத் தில் 1684 பள்ளிகளில் பயிலும் 74158 மாணவர்களுக்கு இதுவரை 3262 கிலோ மசாலாபொருட்கள் மாதந்தோரும் தேவையின் அடிப்படையில் தேவைப்பட் டியல் பெறப்பட்டு மாசாலா பொருட்கள் காலை உணவு மைய பொறுப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட் டத்தில் நிகர இலாபமாக முதலீடு போக ஒரு கிலோவிற்கு ரூ.35/- வீதம் 18 வட்டாரங்களில் உள்ள அந்தந்த வட்டாரத்தைசார்ந்த குழுக்களுக்கு மொத்தமாக 3262 கிலோவிற்கு ரூ.1,14,170/- இதுவரை நிகர இலாபம் ஈட் டியுள்ளனர்.
இதனை முன்மாதிரியாக கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியம் 3 நகராட்சிகள் ஆகியவற்றில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் 2027 பள்ளிகளில் பயிலும் 205976 மாணவர்களுக்கும் இத் திட்டத்தினை விரிவுபடுத்தி செயல்படுத்த மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மற்றும் வட்டார வளாச்சி அலுவலர்கள்(வ.ஊ) மூலமாகவும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் முன்மதிப்பீடாக 9062 கிலோ தேவைப்படலாம் என கணக்கிடப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரம் மேம்படும் பொருட்டு தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளி களிலும் மதிய உணவு உண்ணும் மாணவர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தினை மேலும் உயர்த்தி வழங்கும் பொருட்டு மதிய உணவு வழங்கும் பொறுப்பு பணியாளர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களை பெற்று உணவு சமைக்கும் வகையில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நடவடிக்கைகள் மேற் கொள்ள மாவட்ட ஆட் சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் காவேரி மகளிர் சுய உதவிக்குழுவினர் மன நிறைவுடன் தெரிவித்ததாவது:
மாவட்ட ஆட்சித்தலைவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களாகிய எங்களுக்கு வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கு தேவை யான மசாலாக்களை எங்கள் மூலமாக உற்பத்தி செய்து வழங்க அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 வட் டாரங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை முறையிலான எவ்வித கலப்படமும் இல்லாத பாரம்பரிய வகையில் மசாலாக்கள் தயா ரித்து எங்கள் வீட்டிற்கு எவ் வாறாக உபயோகிப்போமோ அதைப்போன்று, தரமான வகை யில் மசாலாக்களைத் தயாரித்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறோம்.
இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் எங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 10 ஆயிரம் வருமானம் கிடைக்கப்பெற்று பயனடைந்து வருகிறோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



