எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 107-ஆவது பிறந்த நாளை யொட்டி, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான எஸ். எஸ்.ராமசாமி படையாட்சியா ரின் 107-ஆவது பிறந்த நாளை யொட்டி, கடலூர் மஞ்சக்குப்பத் தில் அமைந்துள்ள மணிமண்ட பத்தில் அரது உருவச் சிலைக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து,மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்பி ரா.ராஜாராம்,மேயர் சுந் தரி, துணை மேயர் பா.தாமரைச் செல்வன், ஆணையர் எஸ்.அனு ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன்,உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



