நாமக்கல் இராமபுரம் புதூரில் உள்ள ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகையில் கல்லூரி இயக்குநர் ஜி.மாதையன், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவிகள் வண்ணப் பூக்களால் கோலமிட்டு கேரள பாரம்பரிய உடை அணிந்து ஆடிப்பாடி ஓணத்தை வரவேற்றனர் .இதில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அத்தப் பூ கோலப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ,நடன நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



