கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண் டாடப்பட்டும். ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். சங்ககால கணிப் புபடி கடவுள் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமனர் அவதரித்த நாளாகவும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகை கொண்டாடும் விதமாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவி லில் ஏராளமான மலையாள மக்கள் குடும்பத்தாருடன் வந்து தரிசனம் செய்து ஓணம் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். மலையாள மக்களின் பாரம்பரிய உடையில் கோவிலுக்கு வருகை தந்தனர்.
மேலும் கோவில் வளாகத்தில் கொடிக்கம்பத்தின் கீழே அத்திப்பூ கோலம் போடப் பட்டுள்ளது அதனை பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மலையாள மக்கள் தங்கள் வீடுகளிலும் அத்திப்பூ கோலமிட்டும் சாமி தரிசனம் செய்து பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுல குக்கு வருவதாக ஐதீகம்.அவரை வரவேற்கும் வித மாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர். தங்களை காண வரும் மகாபலி மன்னனுக்காக அத்தப்பூ கோலம் போட்டு வீடுகளை அலங்கரித்து விளக்கேற்றி மலையாள மக்கள் வரவேற்பு அளிப்பார்கள்.
கேரளாவில் அஸ்தம், சித்திரை, சுவாதி,விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல ஓணம் பண்டிகை ஒட்டி கோவை ஐயப்பன் கோவிலில் குழந் தைகளுக்கு சோறு ஊட்டும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நாளில் பிறந்து சில மாதங்களான குழந் தைகளுக்கு இன்று முதல் நாளாக சோறு ஊட் டுவது ஐதீகம் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.



