fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நீலகிரி மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, ஒசட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கலந்து கொண்டு, 56 பயனாளிகளுக்கு ரூ.57.58 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இம்முகாமில், மாவட்ட ஆட் சித்தலைவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல் வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கும் திட்டத்தின்கீழ் 1 குழுவிற்கு ரூ.11 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், 1 பயனாளிக்கு ரூ.50,000/- மதிப்பில் கடனுதவிகளும், 1 பயனாளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்திற்கான வைப்புத் தொகை பத்திரங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில், 3 பயனாளிகளுக்கு ரூ.24,000/- மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.31,036/- மதிப்பில் தெளிப்பு நீர் பாசன கருவிகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.16,000/- மதிப்பில் மண்புழு உர படுக்கையும், 3 பயனாளிகளுக்கு ரூ.19,000/- மதிப்பில் இயற்கை இடுப் பொருட்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், 10 பய னாளிகளுக்கு ரூ.20,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்களை யும், 7 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளையும், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின் சார்பில் முதல மைச்சரின் உழவர் பாது காப்புத் திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.65,000மும், மாவட்ட வழங் கல்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.25,000/- புதிய குடும்ப அட்டைகளும், வேளாண் பொறியியல்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1,58,788/- மதிப்பிலான பவர் டில்லரையும், 1 பயனாளிக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான டிராக் டரினையும் என மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.57.58 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சிறுபான்மையின நலத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்
சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இம்முகாமில், கூடுதல் ஆட் சியர் (வளர்ச்சி) கௌசிக், குன்னூர் சார் ஆட்சியர் சங் கீதா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / உதவி ஆணையர் (கலால்) தனப்பிரியா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்தியநாராயணன், வேளாண் மை பொறியியல்துறை செயற் பொறியாளர் ராதாகிருஷணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், குன்னூர் ஊராட் சித்தலைவர் சுனிதாநேரு, மாவ ட்ட தொழில் மைய பொது மேலாளர் (பொ) திலகவதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் திரு.சுரேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img