கோவை மாவட்ட உதவும் கரங்கள் அனைத்து வாகன சுற்றுலா ஓட்டுனர் நண்பர்கள் நலச்சங்கத்தினர். மாதம்தோறும் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
உதவும் கரங்கள் நண்பர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இணைந்து கடந்த 5 வருடமாக ஓட்டுனர்களின் குடும்பத்துக்கு மருத்துவ உதவி, ஓட்டுனர் இறந்துவிட்டால் குழந்தைகளின் பெயர்களில் பணம் டெபாசிட் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ரத்ததானம் செய்வது முதல் பேரிடர் காலங்களில் பொருள் உதவி என தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
வருடம் ஒரு முறை ஏழை எளியோர், ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கி வந்த நிலையில் சமீபமாக மாதம் ஒரு முறை நல்ல சுவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். ஓட்டுனர்களாக இணைந்து இப்படி சமூக பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவர் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.



