fbpx
Homeபிற செய்திகள்பள்ளிகளை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் ஆய்வு

பள்ளிகளை மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் ஆய்வு

தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்ததை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்த வகையில் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் 11 துவக்கப்பள்ளிகள், இரு உயர்நிலைப்பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி என மொத்தமாக 14 அரசுப்பள்ளிகள் உள்ளன.

இதில் துவக்க பள்ளிகளில் 1236 மாணவர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் 485 மாணவர்களும், மேல்நிலைப்பள்ளியில் 1140 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மைப்பணிகள், குடிநீர், மின்சார இணைப்புகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகளிடையே அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆவண செய்யுமாறு தலைமை ஆசிரியர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img