fbpx
Homeபிற செய்திகள்ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழன் ரத்ததான அறக்கட்டளை நண்பர்கள் குழு மற்றும் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை ஆகியவை இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாம் ஆனது நடைபெற்றது .

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர். ரத்ததான முகாமை பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணை தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ரத்த தானம் செய்த இளைஞர்களுக்கு ரத்த தானம் செய்ததற்கான பாராட்டு சான்றிதழ், உடல் நலத்தை பேணி காக்கும் வகையில் பழங்கள் மற்றும் மரக்கன்றுகள், நினைவு பரிசாக புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனை சார்பாக இலவச முழு உடல் மற்றும் பல் பரிசோதனை முகாமும் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img