கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பொள்ளாச்சி சாலை முதல் செட்டிபாளையம் சாலை சென்றடையும் வகையில் திட்ட இணைப்புச் சாலை அமைப்பது குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் துணை மேயர் வெற்றி செல்வன், ஆளுங்கட்சித் தலைவர் கார்த்திகேயன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர், கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



