fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறை திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறை திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (12ம் தேதி) அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்/தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் போளுரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் நல மாணவியர்கள் விடுதியில் 2 நாப்கின் எரியூட்டிகளை வழங்கினார்.

மேலும் போளுர் வட்டம் கரைப்பூண்டி ஊராட்சி சாணாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பால் வழங்கி வருவதையும் மனுதாரர்களுக்கு அரசு ஊழியர்களை கொண்டு கட்டணமில்லாமல் மனு எழுதித் தருவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ் குமார் பாராட்டினார்.

மேலும், ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3.49 கோடி யில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் அலு வலகம் கட்டும் பணியினையும், அதனை தொடர்ந்து, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில் ரூபாய் 13.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலை கடை கட்டிட பணியினையும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் நாயுடு மங்களம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் இருளர் மக்களுக்கு வீடு கட்டப்பட்டு வரும் இடத்தினையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செ.ஆ.ரிஷப்,மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாச்சியர் மந்தாகினி, செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img