கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் டிசிஎஸ் அயான் இணைந்து தேசிய கருத்தரங்கம் நடத்தினர்.
இந்த “டேட்டா சயின்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் 24” எனும் தலைப்பிலான கருத்தரங்கிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர், செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார்.
கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் வி.விஜயகுமார் வரவேற்றார். இதன் சிறப்பு விருந்தினர்களாக பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.லவ்லின்ரோஸ், டிசி எஸ்அயானின் டொமைன் ஆலோசகர் தெபாசிஸ்ராய் மற்றும் கோயம்புத்தூர் சிடிஎஸ், சீனியர் அசோசியேட் சௌமியா விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும், டிசிஎஸ் அயானின் மண்டலத் தலைவர் பிரதிக்குப்தா பங்கேற்று சிறப்பித்தார்.
தொடர்ந்து கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்டுரையாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். இப்படி மொத்தம் 75 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.



