கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வ.உ.சி. பூங்காவில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் கூடைப்பந்து மைதான வளாகத்தின் மேற்கூரை அமைக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் மேலாண்மை இயக்குநருமான செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் விமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



