fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் வேதியியல் துறை பேரவை துவக்க விழா

மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் வேதியியல் துறை பேரவை துவக்க விழா

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை துவக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நேற்று கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேதியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மேனகா மற்றும் தீபிகா புனைந்து உரையாற்றினார் கள். மாணவி சீதாலட்சுமி சிறப்பு வர வேற்புரையும் நிவேதா நன்றியு ரையும் ஆற்றினார்கள். இதேபோல் அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். இந்த கண்காட்சியில் இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெல்த் ஃப்ரம் வேஸ்ட் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியில் பல்வேறு துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கண்காட்சிக்கு நடுவர்களாக இயற்பியல் துறை தலைவர் பாலன், கணிதவியல் துறை தலைவர் பபிதா உள் ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக வேதியியல் துறை கௌரவ விரிவுரையாளர் ராஜேஸ்வரி கண்காட்சியினை கண்டு விழிப்புணர்வு பெற்ற பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img