Homeபிற செய்திகள்கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்த கோவை மேயர்

கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி, கந்தசாமி நகரில் மாநில நிதி கழக திட்டம் 2023-24ன் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பழனிசாமி (எ) சிரவை சிவா, பூங்கொடி சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் சக்திவேல், வட்டார கல்வி அலுவலர் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் ரமேஷ்பாபு, பள்ளி தலைமையாசிரியர் (பொ) எலிசபெத், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img