fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச ராணுவ சுற்றுப்பயணத்திற்கு இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் ஹர்ஷித் பாபு தேர்வு

சர்வதேச ராணுவ சுற்றுப்பயணத்திற்கு இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் ஹர்ஷித் பாபு தேர்வு

கோவை ஒத்தக்கால்மண்டபம் இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் ஹர்ஷித் பாபு, அகில இந்திய அளவில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு-2023 முகாமில் பங்கு பெற்றார்.

அதனை தொடர்ந்து இராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற நேர்காணலில் முதலிடம் பெற்று, சர்வதேச அரசு முறை இராணுவ சுற்றுப்பயணத்திற்கு தேர்வு பெற்றார். அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களில் இவரும் ஒருவர்.

தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற ஒரே மாணவர் இவர் என் பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அவர் ஜனவரி 28 முதல் மார்ச் 2024 வரை ஆப்பிரிக்க நாடு களான கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பியா நாடுகளுக்கு இந்திய ராணுவ கடலோர பாதுகாப்பு கப்பலில் சுற்றுப்பயணம் சென்று மேற்கண்ட நாடுகளின் இராணுவ மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

மாணவரின் திறமையை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கொங்கு மாமணி சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் முனைவர் பிரியா சதீஸ் பிரபு ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெ.ஜெயா, முதன்மை செயல் அதிகாரி முனைவர் கே.கருணாகரன், என்சிசி அலுவலர்கள் பிளையிங் ஆபிஸர் ஜெய்னுலாபுதீன், லெட்டினன்ட் ரவிக்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img