திருப்பூரில், திருப்பூர் கேரளா ஃபிரண்ட்ஸ் கிளப் சூப்பர் அமைப்பு சார்பில் ஸ்ரீ பகவதி கிளோதிங் வழங்கும் திருப்பூர் கேரளா ஃபிரண்ட்ஸ் கிளப் சூப்பர் கப் கால்பந்து லீக் போட்டி இந்த மாதம் ஜனவரி 27 ந் தேதி ஞாயிறு அன்று பல்லடம் ரோட்ஃபத்தாஹ் டர்பில் நடைபெற உள்ளது.
ஆன்லைன் வழியில் பதிவு செய்த 90 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கிறார்கள். 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி லீக் முறையில் நடக்கிறது.
இந்த போட்டியில் பிளாக் அவுட், பியூகோ ஸ்ட்ரைக்கச், ஜீமா கிளோத்திங், டிசைர் பிரண்ட்ஸ் கிளப், ரைசிங் செல் பிரண்ட்ஸ் கிளப், கிரீனேர்ஸ் யுனைடெட், கார்கோ டரக்கு, நோவிச் பிரண்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியில் முதல் பரிசாக ரூ.60,000, இரண்டாம் பரிசாக ரூ.30,000, 3 மற்றும் 4ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படுகிறது. இந்தியன் ப்ரொபஷனல் புட்பால் வீரர் ரவி கின்னஸ் டேலண்ட் அவார்ட் வின்னர் ரிஸ்வான் ஆகிய இருவரும் முக்கிய விருந்தினராக பங்கேற்க இருக்கிறார்கள்.
திருப்பூரில் திருப்பூர் கேரளா ஃபிரண்ட்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் தான் இந்த போட்டியில் பங்கேற்க முடியும்.
போட்டியின் கமிட்டி உறுப்பினர்களாக கிளப் தலைவர் டி.ஏ.நிஷாத், கே.பி.நுஷாத், பொருளாளர் அப்துல் சமது, ஒருங்கிணைப்பாளர் ராஷி, நவுஷூ ஆகியோர் செயல்படுவார்கள்.