கோவை சிங்காநல்லூர் தனபால் லே அவுட் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி ஆதி முருகன் வள்ளி கும்மி குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் சுவாமிகள் தொடங்கி வைத்தார். விழாவில் கோவை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சிங்கை எஸ் பாலன் எம் துரைசாமி பாலசுப்பிரமணியம் கணேஷ் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



