‘ஃபிரஸ் ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் – 2024’ ஓட்டம் வரும் ஜனவரி 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த மாரத்தான் போட்டியை சென்னையை சேர்ந்த உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான ‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க்‘ மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 12ம் ஆண்டாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 6ம் தேதி நடைபெறும் நிகழ்வில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்வம், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மாரத்தான் ஓட்ட வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன் லாப நோக்கின்றி தி சென்னை ரன்னர்ஸ் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் மாரத்தான் ஓட்டத்துக்கு, சர்வதேச மாரத்தான் மற்றும் தூர பந்தயங்களுக்கான சான்றளிக்கும் சங் கம் (ஏஐஎம்எஸ்) சான்றளிக்க உள்ளது.
இந்தியாவில் 2வது மிகப்பெரிய மாரத்தான் போட்டியான இதில் ஆண்கள், பெண்களுக்கு 4 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. முழு மாரத் தான் 42.195 கி.மீ. தொலைவுக்கும், பெர்ஃபெக்ட் 20 மைலர் போட்டி 32.186 கி.மீ. தொலைவுக்கும், அரை மாரத்தான் போட்டி 21.097 கி.மீ. தொலைவுக்கும் நடைபெற உள்ளன.
இது தவிர 10 கி.மீ. ஓட்டமும் நடைபெறுகிறது. பார்வைத்திறன் பாதிப்பு உள்ளவர்கள், பிளேடு ரன்னர்கள், வீல்சேர் ரன்னர்களும் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இன்சுலின் செலவுக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் இந்த மாரத்தான் நடத்தப்படுகிறது.
பாஷ்யம், சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப், சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் பார்ட்னராக இணைந்துள்ளன. மேலும் விவரங்களை லீttஜீs://tலீமீநீலீமீஸீஸீணீவீனீணீக்ஷீணீtலீஷீஸீ.நீஷீனீ/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.



