ட்ரீம் அலைன்ஸ் மற்றும் ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன் ஷிப் போட்டிகள் 2023 பெங்களூருவில் நடைபெற்றது. ஈகுவைன் ட்ரீம்ஸ் – ஜிப்பியை சேர்ந்த ஹாசினி மற்றும் பாலமுருகன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், பாலமுருகன், ஆர்யா, நக்சத், மித்ரா மற்றும் சாலதி ஆகியோர் பங்கு பெற்று வெண்கல பதக்கங்களையும் வென்றனர்.
பல ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு குதிரைகளில் பயிற்சி பெற்றதன் மூலம் ஒவ்வொரு குதிரையின் தனித்துவமான தன் மையை புரிந்து கொள்வதில் கற்றுத் தேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் அவர்களின் கடின உழைப்பு பயிற்சி மற்றும் விடாமுயற்சி ஆகியவை இந்த ஆண்டு ஜேஎன்இசியில் அவர்களை மிகச்சிறந்த போட்டியாளர்களாக மாற்றியது.
மாணவர்கள் தங்கள் வெற்றியை தங்கள் தலைமை நிர்வாக அதிகாரி திருசக்தி பாலாஜிக்கு அர்ப்பணித்தனர்.
மேலும் இதுபற்றி அவர்கள் கூறுகையில் திருசக்தி பாலாஜி சிறந்த வழிகாட்டியாகவும், பயிற்சியாளராக இருந்ததாகவும் அவரது வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியின் பலனாக போட்டியில் வெற்றிபெற முடிந்தது எனவும் கூறினர்.



