கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்- திருப்பூர் மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறை இணை இயக்குனர் தொடக்கி வைத்தார்.
பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நேற்று (செவ்வாய்கிழமை) நடந்தது.
கேஸ் கம்பெனி பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இதற்கு நகராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்தார். துணை தலைவர் ரதிராஜேந்திரன், ஆணையாளர் மனோ கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சியின் 19 முதல் 27 வார்டுக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கென நடத் தப்பட்ட இந்த முகாமின் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மண்டல நகர £ட்சிகள் நிர்வாகத் துறை இணை இயக்குனர் மருத் துவர் இளங்கோவன் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்தார்.
இதில் இருபதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளைச் சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்டு பொதுமக்க ளிடம் மனுக்களை பெற்றனர். இதனை கோவை வடக்கு வட்டாட்சியர் மணிவேல் பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா ஆகியோர் பார்வையிட்டனர்.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெக தீசன், மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுமார், குடிமைப் பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் சாந்தாமணி, குடிசை மாற்று வாரிய அதிகாரி கருப்புசாமி, நகரமன்ற உறுப்பினர் கள் துரை செந்தில், பாலசுப்பிரமணியன், முருகானந்தம், சரண்யா, சங்கீதா, ராகுல் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் திருப்பதி, மேற்பார்வையாளர் தர்மராஜ், வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.