தூத்துக்குடியில் கன மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட அண்ணாநகர், மகிழ்ச்சி புரம் பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெள்ள சேதங் களை பார்வையிட்டு, இம்மக்களுக்கு ஆறுதல் கூறி ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்க ளிடம் அன்புமணி ராம தாஸ் இருப்பதாவது:
திருநெல்வேலி, தூத் துக்குடி மாவட் டங்கள் இந்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் உடமைகளையும் வீடுகளை யும் இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசின் மீட்பு மற்றும் நிவாரணம் பணிகள் முழுமையாக சென்று அடையவில்லை.
குறிப்பாக ஸ்ரீவை குண்டம், ஏரல் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது.
அரசும் அதிகாரிகளும் நிவாரண பணிகளை இன்னும் விரைந்து செயல்படுத்த வேண்டும், மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ரூபாய் 6000 என்பது மக்களுக்கு உரிய நிவாரணமாக இருக் காது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் அரசு சார்பில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை, வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகர, பகுதி, ஒன்றிய பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.



