பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கூடலூர் நகர திமுக மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை தெற்கு பாளையத்தில் நடந்தது.
இதற்கு மகளிர் அணியின் மாவட்ட அமைப்பாளர் ரதி மனோகர் தலைமை வகித்தார்.
மகளிர் அணி யின் மாவட்டத் துணைத் தலைவரும் மற்றும் கூட லூர் நகராட்சி துணைத் தலைவருமான ரதி ராஜேந்திரன் அனைவ ரையும் வரவேற்றார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரங்கநாயகி, மகளிர் அணித் தலைவர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் தொண்டாமுத்தூர் பார்வதி, அமர்தவள்ளி, தேவகி ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக கூடலூர் நகராட்சித் தலைவர் அறிவரசு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் 2000 உறுப்பினர்கள் சேர்க்கை படிவங்கள் மாவட்டப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மகளிர் அணிகள் கூடுதலாக உறுப்பினர்களை இணைக்கும் பணிகளை மேற்கொள்வது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானிக்கப்பட்டன.
கூட்டத்தில் கூடலூர் நகராட்சியின் 27 வார்டுகளின் ரம்யா, மணிமேகலை, சித்ரா, சங்கீதா, மீனா கணேசன், சாந்தாமணி, ஜானகி ரேகா உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகர மகளிர் அணி நிர்வாகிகள் கிரேசி, செல்வி, சுகந்தி, ஸ்ரீனியம்மாள், விஷ்ணுப் பிரியா, ஜீவா, சித்ரா, பேபி, நந்தினி, சரண்யா, புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் சரோஜினி நன்றி கூறினார்.