fbpx
Homeபிற செய்திகள்சின்னத்தடாகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு எம்எல்ஏ பூமிபூஜை

சின்னத்தடாகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு எம்எல்ஏ பூமிபூஜை

துடியலூர் அருகே உள்ள சின்னத் தடாகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான பூமிபூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட இந்த ஊராட்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் தீபிகா சுந்தரமூர்த்தி தனது ஒன்றிய வளர்ச்சி நிதியின் கீழ் சின்னத்தடாகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வீதியில் ரூ.5 லட்சம் மதீபீட்டில் கழிவுநீர் வடிகால் வசதியும், வடக்கு வீதியில் ரூ.9.61 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கென நடந்த பூமிபூஜைக்கு சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத் தலைவர் சௌந்திரவடிவு ஆனந்தன், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நர்மதா துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் தீபிகா சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண் குமார் தலைமை வகித்து பணிகளைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் துணைத் தலைவர் வேல்முருகன், ஊராட்சி உறுப்பினர்கள் சௌந்திரராஜன், பழனிச்சாமி, மோகன், ஒன்றிய குழுவின் முன்னாள் பெருந்தலைவர் கோவனூர் துரைசாமி, கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் பொ.சண்முகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், மகேஸ்வரன், வழக்குரைஞர் மாரிமுத்து, யுவராஜ், பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img