ஈரோடு மாவட்டம் கொடுமுடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் இலவச பயன்பாட்டுக்காக சுதா மருத்துவமனை சார்பில் ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டது. சுதா மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் கந்தசாமி ஸ்கேன் இயந்திரத்தை, மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் அம்பிகா சண்முகம், கொடுமுடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரேவதி முன்னிலையில் வழங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



