சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கல்லூ ரியின் துணை முதல் வர் சாந்தகுமாரி வர வேற்றார்.
இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் செந்தில்குமார், அருள்முருகன், தமிழ்நாடு அரசின் சட்டக் கல்வி இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான தார்வேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, 248 மாணவர்களுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்தி பேசினர்.
விழாவில், நீதிபதி செந்தில்குமார் பேசியதாவது: தற்போது 33 சதவிகத்துக்கும் அதிகமான பெண்கள் சட்டத்துறையில் இருப்பது நமக்கு பெரு மையே. இத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
முன்பு சட்டம் படித்த வர்கள் சிவில் மற்றும் கிரிமினல் ஆகிய 2 வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்தி வந்தனர். ஆனால் தற்போது சட்டம் படித்தவர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
மருத்துவ பிரிவு, கட்டு மானப் பிரிவு, தணிக்கை பிரிவு போன்றவற்றில் மட்டுமில்லாமல், சமரச தீர்வு மையம் போன்ற வற்றில் வழக்கறிஞர்களின் தேவைகள் அதிகமாக உள்ளது.
நீதி மன்றத்தில் வழக் குகளை கையாளும் விதம் சரியாக இருந்தால், கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை எங்கும் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், இணை நிர்வாக அதிகாரி சுகந்தி, முதல்வர் பேகம் பாத்திமா, டீன் கீதா மற்றும் துறை பேராசிரியர்கள், மாவட்ட நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் உதவி பேராசிரியர் நிவேதப் பிரியா நன்றி தெரிவித்தார்.



