Homeபிற செய்திகள்இளைஞரின் மருத்துவ சிகிச்சைக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

இளைஞரின் மருத்துவ சிகிச்சைக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சின்னான் மகன் விக்னேஷ் 22 இவருக்கு கையில் ஏற்பட்ட நரம்பு பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்

மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் தனது மருத்துவ சிகிச்சை உதவிக்காக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் உதவி கோரி இருந்தார்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அந்த இளைஞரின் மருத்துவ சிகிச்சைக்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 50,000 வழங்கினார்.

உடன் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன்,கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img