அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) சமீபத்திய அறிவிப்பில் அதன் ஒப்புதல் செயல்முறை கையேட்டில் 2024-25 முதல் 2026-27 வரை பிபிஏ மற்றும் பிசிஏ பாடப்பரிவுகளை அனைத்து தொழில்நுட்ப மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 2024-2025 கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் மாநில அரசின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பிபிஏ மற்றும் பிசிஏ பாடத்திட்டங்களுக் கான ஒப்புதல் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) 2024-&2025 கல்வியாண்டு முதல் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான பிரச்னை குறித்து விவாதிக்க தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளின் சங்க பொதுக்குழு கூட்டம் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நூற்றுக்கணக் கான கல்லூரிகள் கலந்து கொண்டன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் புதிய வரைவு கையேட்டில் தொழில்நுட்பம் அல்லாத பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளை ஏஐசிடிஇ கீழ் இணைப்பது மற்றும் பொறியியல் கல்லூரி கள் பிபிஏஇ பிசிஏ போன்ற படிப்புகளைத் தொடங்கவும் அனுமதிப் பதைக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வரைவு கையேட்டில் உள்ள அறிவிப்பை திரும் பப் பெறவும் பொறி யியல் கல்லூரிகளில் தொழில்நுட்பம் அல்லாத பாடப்பிரிவுகளை தொ டங்க அனுமதிக்கக் கூடாது என்றும் – அகில இந் திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில உறுப்பினர் செயலரிடம் (ஏஐசிடிஇ) கோரிக்கை வைப்பது என செயலாளர்கள், முதல் வர்கள், ஆசிரியர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
ஏஐசிடிஇ இன் முடிவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் குறிப்பாக கிராமப்புறங்களில் கல்வி சேவை செய்யும் கல்வி திட்டங்களுக்கான சேர்க் கையைக் குறைக்கும். மேலும் கடுமையான நிபந்தனைகளால் கலை மற்றும் அறிவியல் கல் லூரிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கான பாதிப் பை ஏற்படுத்தும்.
இந்தக் கல்லூரிகளுக்கு கூடுதல் அனுமதி தேவை என்ற AICTEஇன் அணுகுமுறை குழப்பத்தையும், செயல்பாட்டு விளக்கத் தையும் ஏற்படுத்தும்.
பல வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிகள் வெற்றிக்கரமாக இந்த பாடத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த பாடத்திட்டங்களுக்கான உள்கட்டமைப்பை உரு வாக்க பொறியியல் கல்லூரி களுக்கு மூன்று ஆண்டு காலம் நேரம் வழங்கி இந்த பாடத்திட்டங்களை துவங்க அனுமதிப்பது நியாயமா னதாக இருக்கமுடியாது.
பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே பிரபலமாக உள்ள கணினி அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள் இந்த அறிவிப்பினால் மொத்த சேர்க்கை விகிதத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
பொறியியல் கல்லூரிகள் அந்தந்த பாடப்பிரிவுகளில் உயர் கல்வியில் கவனம் செலுத்தும்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இளங்களை பாடங்களுக்கான பட்டப்படிப்பைக் கொடுத்து அதன்மூலம் மாணவர்களை உருவாக்கி தொழில் சார்ந்த துறைகளுக்கு அனுப்ப வழிவகுக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



