கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற அவசர கூட்டம் மேயர் கல்பனா ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு தீர் மானம் போடப்பட்டது.
47 ஏக்கரில், அமைய உள்ள செம்மொழி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவிற்கு 99.44 கோடி ரூபாய், கோவை மாநகராட்சி உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செம்மொழி பூங்காவிற்கு குழாய் அமைக்க 7.83 கோடி ரூபாய், செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு 25.56 கோடி ரூபாய், கலையரங்கம் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைப்பதற்கு 6.38 கோடிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, கோவை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், சர்மிளா, ரமேஷ் ஆகிய மூவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வ.உ.சி உயிரியல் பூங்கா வேண்டுமென வலியுறுத்தியும் விக்டோரியா ஹால் முன்பு முழக்கங்களை எழுப்பிய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



